மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் ஜன.5ல் நெடுந்துார ஓட்டப்போட்டி
28-Dec-2024
ஈரோடு, ஜன. 2-அண்ணாதுரை மாரத்தான் ஓட்டப்போட்டி வரும், 5ல் ஈரோடு மாவட்டத்தில் நடக்கிறது. இதில், 17 முதல், 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு அரங்கில் இருந்து துவங்கி சூளை, கனிராவுத்தர் குளம், தண்ணீர்பந்தல் பாளையம் வரை சாலையில் ஆண், பெண்களுக்கு என தனித்தனியே மாரத்தான் போட்டி நடைபெறும். முதல் மூன்று பேருக்கு பரிசு வழங்கப்படும். நான்கு முதல், 10வது இடம் வரை வருபவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும் என, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
28-Dec-2024