மேலும் செய்திகள்
படைவீரர் குறைதீர் கூட்டம்
06-Dec-2024
கொடிநாள் நிதி வசூலில்இலக்கை விஞ்சிய ஈரோடுஈரோடு, டிச. 8-'படைவீரர் கொடி நாளை' முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொடி நாள் நிதி வசூல் பணி துவக்க நிகழ்ச்சி மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடந்தது. உண்டியலில் படைவீரர் கொடி நாள் நிதியை செலுத்தி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு கொடி நாள் நிதி வசூல் இலக்கு, 1 கோடியே, 64 லட்சத்து, 70,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கோடியே, 87 லட்சத்து, 39,350 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி, 5.60 லட்சம் ரூபாய் நிர்ணயித்து, 6.59 லட்சம் ரூபாய் வழங்கினர். மக்கள் தொடர்ந்து கொடி நாள் வசூலுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார். பின், முன்னாள் படைவீரர், அவர்களது குடும்பத்தாருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் நான்கு பேருக்கு, 1.75 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுப்பு நிதி, கல்வி உதவித்தொகை, 10 பேருக்கு, 3.10 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரர் நலன் கண்காணிப்பாளர் - உதவி இயக்குனர் புஷ்பலதா, ஓய்வு பெற்ற பிரிகேடியர் லோகநாதன், ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் நாகராஜன், நல அமைப்பாளர் சாமுவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Dec-2024