அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
அவிநாசி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை அவிநாசியில் அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக அவிநாசி நகராட்சி, முத்துசெட்டிபாளையம் புனித தோமையர் துவக்கப் பள்ளியில், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தினார்.முன்னதாக அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''முதல் கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில், 2022ல், ஆண்டு குண்டடம் வட்டாரத்தில், 76 பள்ளிகளில், 1,429 மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் துவங்கப்பட்டது. 2ம் கட்டமாக, 1081 பள்ளிகளில், 63,880 மாணவர்கள், மூன்றாம் கட்டமாக, 31 அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில், 1,733 மாணவர்கள் பயனடையும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, 4ம் கட்டமாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 1,217 பள்ளிகளில், 72,251 மாணவர்கள் பயனடைகின்றனர்,'' என்றார்.