உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காய்கறிகள் விலை வீழ்ச்சி

காய்கறிகள் விலை வீழ்ச்சி

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, வரத்து அதிக-ரிப்பால் நேற்று விலை வெகுவாக குறைந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ, ௬௦ ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய், 30 ரூபாயாக குறைந்-தது. இதேபோல், 70க்கு விற்ற பாகற்காய், 40 ரூபாயாக சரிந்தது. கேரட், பீட்ரூட், ௮௦ ரூபாயில் இருந்து 60 ரூபாயாக குறைந்து விட்டது.அதேசமயம் கடந்த வாரம் ஒரு கிலோ, 60- ரூபாய்க்கு விற்ற முருங்கை, 100 ரூபாயாக எகிறியது. கருப்பு அவரை, பீன்ஸ் கிலோ, 150 ரூபாய், தக்காளி, 70, இஞ்சி, 200, பச்சை மிளகாய், 60 ரூபாய்க்கும் விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !