மேலும் செய்திகள்
துரைமுருகனிடம் நலம் விசாரித்தார் பழனிசாமி
15-Oct-2025
பவானி, அம்மாபேட்டை அருகே குறிச்சி, பண்டார தோட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல், 57; விவசாயியான இவருக்கு மனைவி, இரண்டு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். சத்தம் கேட்டு சென்ற குடும்பத்தினர், அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வீரர்கள், ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு, பழனி வேல் உடலை மீட்டனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Oct-2025