/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 155 ஆண்டு பழமை காபி அரவை இயந்திரம் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த விவசாயி
155 ஆண்டு பழமை காபி அரவை இயந்திரம் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த விவசாயி
ஈரோடு :ஈரோடு வ.உ.சி., பூங்கா எதிரில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 155 ஆண்டு பழமையான காபி அரவை இயந்திரம் காட்சிக்கு வந்துள்ளது.இதுகுறித்து அருங்காட்சியக காப்பாளர் ஜென்சி கூறியதாவது: இவ்வகை காபி அரவை இயந்திரம், ௧870ல் பயன்பாட்டில் இருந்தது. இயந்திரத்தின் மேற்புறத்தில் காபி கொட்டைகளை போட்டு கைப்பிடியை சுற்றினால் காபி துாள் கிடைக்கும். இந்த முறையில்தான் அன்றைய கால கட்டத்தில் துாள் தயாரித்து காபி பிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த இயந்திரத்தை கோபியை சேர்ந்த விவசாயி சரவணன், 75, அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.