உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிகள் முற்றுகை

விவசாயிகள் முற்றுகை

அந்தியூர்: வெள்ளித்திருப்பூரை அடுத்த எண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கணபதி. வீட்டு மின் இணைப்பு கேட்டு, கடந்தாண்டு டிச., மாதம் விண்ணப்பித்தார். ஆய்வு செய்த மின்வாரிய அலுவலர்கள், அவர் கேட்ட கம்பத்திலிருந்து இணைப்பு வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தியூர் துணை மின் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஒரு மணி நேரத்தில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை