விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்சத்தியமங்கலம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை முன், சங்கத் தலைவர் சதீஷ்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி லாபத்தில் வழங்க வேண்டிய பங்குத்தொகை, 14 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில பொது செயலாளர் ரவீந்திரன் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்க செயலாளர் முத்துசாமி உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கரும்பை கைகளில் ஏந்தி பங்கேற்றனர்.