உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அதிர்ச்சி தந்த அந்தியூர் சொசைட்டி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

அதிர்ச்சி தந்த அந்தியூர் சொசைட்டி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

அந்தியூர், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், திங்கட்கிழமை தோறும் பருத்தி, தேங்காய் பருப்பு, தேங்காய், எள் உள்ளிட்ட விளைபொருட்கள் ஏலம் நடக்கிறது.ஏலத்துக்குப் பின், வியாபாரிகளிடம் தொகையை வசூலித்து, விவசாயிகளின் வங்கி கணக்கில், விற்பனை கூட நிர்வாகம் செலுத்தி வந்தனர். நேற்று காலை ஏலம் துவங்கும் முன், ஏலம் எடுக்கும் வியாபாரிகளே, பண பட்டுவாடா செய்வார்கள் என ஒழுங்குமுறை நிர்வாகம் அறிவித்தது.இதனால் கொதிப்படைந்த விவசாயிகள், பணம் பட்டுவாடாவில் பிரச்னை இருந்தால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அணுகலாம். வியாபாரிகளை எங்கு தேடி பிடிப்பது? பழைய நடைமுறையே இருக்க வேண்டும் என்று, கண்காணிப்பாளர் ஞானசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பருத்தி உள்ளிட்ட ஏலத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தியூர்-சத்தி சாலையில், மதியம் மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலைந்து செல்ல அறிவுறுத்தினார். இதனால் கலைந்து சென்ற விவசாயிகளிடம், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் ஞானசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதுகுறித்து கலெக்டர் கந்தசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்காலிகமாக பழைய நடைமுறையில் விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்படும் எனக்கூறியதால் விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து மாலை, ௪:௦௦ மணிக்கு மேல் ஏலம் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ