உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி.இ.டி., கலை கல்லுாரியில் ஆடை வடிவமைப்பு போட்டி

வி.இ.டி., கலை கல்லுாரியில் ஆடை வடிவமைப்பு போட்டி

ஈரோடு: ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நவீன ஆடை வடிவமைப்பு போட்டி நடந்தது. இதில் ஆடவர், பெண்கள், குழந்தைகளுக்கான நவீன ஆடை காட்சி நடந்தது. வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்பிரமணியம், கல்லுாரி முதல்வர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் லோகேஷ் குமார், சி.டி.எப்., துறைதலைவர் ராஜலட்சுமி கலந்து கொண்-டனர். சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு நந்து வினோ ஒப்பனை மைய நிர்வாகி நந்தினி, திருப்பூர் நவீன ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஒப்பனை வல்லுனர் கவுதம் கலந்து கொண்டனர். இவர்கள் தம் உரையில் படைப்பாக்க பெருவிருப்பத்தை மேம்ப-டுத்துவதற்கான வழிமுறை, வடிவமைப்பு சிந்தனை உத்திகள் குறித்தும் பேசினர்.ஆடவர், மகளிர் பிரிவில் சிறந்த மாடல், சிறந்த வடிவமைப்-பாளர், படைப்பாக்க வடிவமைப்பாளர் என நான்கு வித விரு-துகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை