மேலும் செய்திகள்
இடி மின்னலுடன் மழை
19-Apr-2025
தாராபுரம் :கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 47; மனைவி பானுரேகா, 44, 11 வயது மகளுடன், காங்கேயம் அருகேயுள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு நேற்று வந்தார். தரிசனம் முடிந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்டார். தாராபுரத்தை கடந்து பைபாஸ் அருகில் தனியார் மகளிர் கல்லுாரி அருகே, மாலை 6:30 மணியளவில் சென்றார். அப்போது முன்னால் சென்ற ஒரு கார் திடீரென நின்றதால், அதன் மீது கிருஷ்ணகுமார் ஓட்டிய கார் மோதியது. அதேசமயம் கிருஷ்ணகுமாரின் காருக்கு பின்னால் வந்த இன்னோவா கார், கிருஷ்ணகுமாரின் கார் மீது மோதியது. அப்போது கிருஷ்ணகுமாரின் காரில் இருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் கிருஷ்ணகுமார், அவரது மனைவிக்கு தீக்காயம் ஏற்பட்டது. சிறுமி கைகளில் சிறு காயங்களுடன் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
19-Apr-2025