உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சொத்தை அபகரித்ததாக மகன் மீது தந்தை புகார்

சொத்தை அபகரித்ததாக மகன் மீது தந்தை புகார்

ஈரோடு, ஈரோடு புது மஜித் வீதியை சேர்ந்தவர் புகாரி, 83; ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளார். கடந்த ஜனவரியில் மனைவி இறந்து விட்டார். அதன் பிறகு மகன் முகமது ரபீக், சதி செய்து எனக்கு உரிய விளக்கம் அளிக்காமல் பல்வேறு சொத்து ஆவணங்களில் என் கையெழுத்தை பெற்றார். இது எனக்கு சில தினங்களுக்கு பின்னரே தெரியவந்தது. பிறகு சொத்து தொடர்பான ஆவணங்களை கேட்டதற்கு காட்ட மறுத்தார். இது எனக்கு மன வேதனை, ஏமாற்றத்தை அளித்தது. என் சொத்து ஆவணங்களை மீட்டெடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு முறை கருங்கல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தும் புகாரை கூட பெற மறுக்கின்றனர். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.இதுபற்றி முகமது ரபீக் கூறும்போது, ''இது எங்கள் குடும்ப பிரச்னை. தற்போதும் கூட என் தந்தையிடம் பேசி விட்டு தான் வருகிறேன். தந்தை மகனுக்கு இடையே உள்ள பிரச்னை இது. இதை பத்திரிக்கையில் போடும் அளவுக்கு ஒன்றும் இல்லை. தனிப்பட்ட பிரச்னை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ