ஆடுகளை கடிக்கும் நாய்களால் அம்மாபேட்டை அருகே அச்சம்
பவானி, அம்மாபேட்டை அருகே கல்பாவி பஞ்., தொட்டிபாளையம், கட்டியாகவுண்டனுார், கல்பாவி, கந்தம்பாளையம், பெரியகுரும்பபாளையம் பகுதிகளில், விவசாயிகள் பட்டி அமைத்து செம்மறி ஆடுகள் வளர்த்து வருகின்றனர். சில நாட்களாக தெருநாய்கள், பட்டிகளுக்குள் புகுந்து ஆடுகளை கடிப்பது ஆங்காங்கே நடந்து வருகிறது.இதுவரை இப்பகுதிகளில் நாய்கள் கடித்ததில் ஏழு ஆடுகள் பலியாகி விட்டன. இதனால் ஆடுகள் வளர்ப்போர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.