உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிக்னலில் விதி மீறிய லாரிக்கு அபராதம்

சிக்னலில் விதி மீறிய லாரிக்கு அபராதம்

கோபி, கோபியில், விதிமீறி பயணித்த டிப்பர் லாரியை நிறுத்தி, அபராதம் விதிக்கப்பட்டது.கோபி போக்குவரத்து சிக்னலில், எஸ்.ஐ., தண்டபாணி நேற்று காலை, 11:45 மணியளவில், மூன்று திசையில் இருந்து பயணிக்கும் வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மைக்கில் அறிவுறுத்தி கொண்டிருந்தார். அப்போது, மொடச்சூர் சாலையில் உள்ள சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர்ந்து முடிந்து, சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததும், அதே சாலையில் இருந்து டிப்பர் லாரி ஒன்று விதிமீறி வேகமாக சிக்னலை நோக்கி கடக்க முயன்றது. அப்போது சத்தி சாலையில் இருந்து, மொடச்சூர் சாலைக்கு திரும்பிய பைக் மீது, டிப்பர் லாரி மோதும் சூழல் ஏற்பட்டது.இதை பார்த்தி எஸ்.ஐ., தண்டபாணி சுதாரித்து கொண்டு, உடனே மைக் மூலம் டிப்பர் லாரி டிரைவரை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்தார். அதன்பின் டிப்பர் லாரியை, இ--சலான் கருவியால் போட்டோ எடுத்து, 500 ரூபாய் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை