மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலக பணிகள் பாதிப்பு
26-Jun-2025
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பணி செய்யும் அலுவலர்கள், கருப்பு பட்டை அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர்.அவசர அவசியம் கருதி எடுக்கப்படும் விடுப்புகளுக்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. பணியமர்த்தப்பட்ட இடங்களில் பணி செய்ய அனுமதி மறுக்கப்படுவது. 'ரேண்டமைஸ்டு' தணிக்கை பணித்திட்டம் என்ற பெயரில், 200 கி.மீ., துார பணித்திட்டத்தை வழங்கி அலைச்சல், மன உளைச்சலை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.உதவி இயக்குனர் பணியிடங்கள், 100க்கும் மேற்பட்டவை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
26-Jun-2025