உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிதி நிறுவன ஏஜன்ட் பலி

நிதி நிறுவன ஏஜன்ட் பலி

அந்தியூர், அந்தியூர் அருகே பருவாச்சியை அடுத்த புன்னம் நல்லாநாய்க்கனுாரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 28; தனியார் நிதி நிறுவன கலெக்ஷன் ஏஜென்ட். பவானியிலிருந்து அந்தியூர் நோக்கி பஜாஜ் பல்சர் பைக்கில், நேற்று முன்தினம் இரவு சென்றார். இரட்டைக்கரடை அடுத்த புங்காட்டார் கடை அருகில், எதிரே வந்த ஈச்சர் வாகனம் மோதியதில், விக்னேஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். தப்பி ஓடிய வேன் டிரைவரை, அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !