மேலும் செய்திகள்
குப்பை கொட்டிய 22 பேருக்கு அபராதம்
29-Nov-2024
பாலிதீன் பயன்பாடு ரூ.55ஆயிரம் அபராதம்
19-Dec-2024
அரசுப்பள்ளி அருகில் 'தம்' விற்ற கடைக்கு அபராதம்ஈரோடு, டிச. 29-ஈரோடு மாநகராட்சியில் பள்ளிகளை சுற்றி, 100 மீட்டர் சுற்றளவில் கடைகளில் புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட ஜவுளி நகர் பகுதியில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜவுளி நகர் நடுநிலைப்பள்ளி அருகே செயல்பட்ட வேலா மளிகை கடையில், பீடி, சிகரெட் விற்பது தெரியவந்தது. பறிமுதல் செய்த அதிகாரிகள், 500 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். அதே பகுதியில் இரு கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து, தலா, 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
29-Nov-2024
19-Dec-2024