தேங்காய் நார் மில்லில்தீ விபத்தால் பரபரப்பு
கோபி:கோபி அருகே, தேங்காய் நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.கோபி அருகே, ஒட்டர் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த கோபிநாத், 36, என்பவர் இதே பகுதியில் தேங்காய் நார் மூலம் கயிறு தயாரிக்கும் தொழில் செய்கிறார். இந்நிலையில் கயிறு தயாரிக்கும் மில்லில் நேற்று காலை, 11:00 மணிக்கு திடீரென நார்கள் தீப்பற்றி எரிந்தன. கோபி தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அங்கு குவிக்கப்பட்டிருந்த தேங்காய் நார்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து, தீயணைப்பு வீரர்கள் விசாரித்து வருகின்றனர்.