உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டாசு கடையில் தீ

பட்டாசு கடையில் தீ

பெருந்துறை; பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தை சேர்ந்தவர் ரகுபதி. தீபாவளியை ஒட்டி தற்காலிக பட்டாசு கடை நடத்தினார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி சென்றார். நேற்று அதிகாலை, 1:50 மணியளவில் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின்படி, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு, ரகுபதி தகவல் கொடுத்தார். நிலைய வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் ஒரு லட்சம் மதிப்புள்ள பட்டாசு எரிந்து சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !