உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நார் மில்லில் தீ விபத்து

நார் மில்லில் தீ விபத்து

காங்கேயம்: காங்கேயம், ஊதியூர் அருகே பொன்னங்காளிவலசை சேர்ந்தவர் சரண்யா, 33; அதே பகுதியில் தேங்காய் நார் மில் நடத்தி வருகிறார். மில்லில் குவிக்கப்பட்டிருந்த நார் குவியலில் நேற்று நண்பகல், 12:30 மணி அளவில் திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தீயை அணைக்க முற்பட்டனர். அணைக்க முடி-யாததால் காங்கேயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்-தனர். தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்-றனர். தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை