மேலும் செய்திகள்
ஈரோட்டில் 3 இடங்களில் தீ விபத்து
15-Apr-2026
ஈரோடு, ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் காமராஜர் நகரில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான தறி பட்டறை உள்ளது. நேற்று மதியம் பட்டறை பகுதியில் காய்ந்த புற்களில் பிடித்த தீ, அங்கிருந்த பழைய துணி, பயன்பாட்டில் இருந்த பொருட்களுக்கு பரவி எரிய துவங்கியது. ஈரோடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் காய்ந்த புற்கள், பழைய துணி, பயன்பாட்டில் இல்லாத பொருட்கள், காய்ந்த மரம் எரிந்து தீக்கிரையாகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பொருட் சேதமும் ஏற்படவில்லை.
15-Apr-2026