உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எலக்ட்ரிக்கல் கடையில் தீ

எலக்ட்ரிக்கல் கடையில் தீ

ஈரோடு:ஈரோடு, வாட்டர் ஆபீஸ் ரோடு, நாட்ராயன் கோவில் நான்காவது வீதியில் வாரி ஏஜென்சி உள்ளது. இங்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள், பி.வி.சி.,பைப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மதியம் கடையில் திடீரென தீப்பிடித்தது. தகவலின்படி சென்ற ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள்,45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி