உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோழிப்பண்ணையில் தீ ரூ.14.5௦ லட்சம் சேதம்

கோழிப்பண்ணையில் தீ ரூ.14.5௦ லட்சம் சேதம்

ஈரோடு: ஈரோட்டில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோழி, ஷெட் எரிந்து விட்டது.ஈரோடு, வில்லரசம்பட்டி, ஜெ.ஜெ. நகரை சேர்ந்த விவசாயி பால-சுப்பிரமணி, அதே பகுதியில் தனது தோட்டத்தில் இரண்டு ஷெட் அமைத்து, கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கோழி குஞ்சுகளை வாங்கி பெரிதானவுடன் விற்று விடுவது வழக்கம். மூன்று நாட்களுக்கு முன், 5,000 கோழி குஞ்சுகளை வாங்கியி-ருந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவில், பண்ணையில் தீ விபத்து ஏற்பட்-டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பரவி பற்றி எரிந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.ஆனாலும் விபத்தில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 2,500 கோழி குஞ்சுகள் கருகின. மேலும், 13 லட்ச ரூபாய் மதிப்பிலான ஷெட்டும் எரிந்து சாம்பலாகி விட்டது. மின் கசிவால் தீ விபத்து நேரிட்டதாக, தீயணைப்பு நிலைய வீரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி