மேலும் செய்திகள்
ஈரோட்டில் 2 இடங்களில் பிடிபட்ட சாரை பாம்புகள்
19-May-2026
ஈரோடு:ஈரோடு கொல்லம்பாளையம் தங்கபட்டக்காரர் வீதியில், பரமேஸ்வரன் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பண்ணை கூரையில் தீப்பிடித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் பரவியது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். கூரையில் மட்டும் தீப்பிடித்ததால் கோழிகள் இறக்கவில்லை. தட்டுமுட்டு சாமான்கள், மர சட்டங்கள் மட்டும் தீக்கிரையானது. விபத்துக்கான காரணம் குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
19-May-2026