உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு

தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு

ஈரோடு: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு தீயணைப்பு நிலையம் சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடந்தது.ஈரோடு தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் துவங்கிய மாரத்தான், காளை மாட்டு சிலை வழியே ஈரோடு கொல்லம்பாளையம் வரை சென்று நிறைவடைந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் துவக்கி வைத்தார்.உதவி மாவட்ட அலுவலர் கணேசன், நிலைய அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். தீ விபத்தின்றி தீபாவளியை கொண்டாடுவது, பட்டாசை பாதுகாப்பாக வெடிப்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ