உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

கொங்கு பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

ஈரோடு, பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லுாரியில், 42-வது ஆண்டு பி.இ., பி.டெக் மற்றும் 11-வது ஆண்டு பி.ஆர்க் பாட வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.கல்லுாரியின் கொங்கு பல்கலை மையத்தில் நடைபெற்ற விழாவில், நாஸ்காம் இயக்குனர் உதயசங்கர் சிறப்பாளராக பங்கேற்று பேசினார். விழாவில், கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், பாரம்பரிய உறுப்பினர்கள் பழனிசாமி, தேவராஜா, வெங்கடாச்சலம், கிருஷ்ணன், தங்கவேலு, கல்லுாரி தாளாளர் இளங்கோ, கல்லுாரி முதல்வர் பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு, நான்கு நாட்களுக்கு புத்தாக்கப்பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பயிற்சியில் பொறியியல் படிப்பின் முக்கியத்துவம், வேலை வாய்ப்பு, யோகா, உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, மனிதநேயம் மற்றும் கல்லுாரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு பிறகு வரும், 19-ம் தேதி முதல், முதலாமாண்டு பாட வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை