மீனவர் பிரச்னை; எம்.எல்.ஏ., அறிக்கை
அந்தியூர்:வரட்டுப்பள்ளம் அணைப்பகுதி, உயிரின சரணாலயத்துக்குள் வந்ததால், அணையில் மீன் பிடிக்க வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. இதனால் உரிமம் பெற்று அணையில் மீன் பிடித்து வரும் அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர், வாழ்வாதாரம் பாதித்துள்ளதாகவும், மீண்டும் உரிமம் கேட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு ஏலம் விட, 2017ல் அ.தி.மு.க., அரசு முனைந்தது. அப்போது கம்யூனிஸ்டுடன் இணைந்து, தி.மு.க., வழக்கு நடத்தி, மீனவ சங்கத்துக்கு உரிமத்தை பெற்று கொடுத்தது.தற்போதும் மீனவர்களுக்காக அமைச்சர்களிடம் பேசி, கலெக்டர் வழியாக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவர் சங்க உறுப்பினர்களுக்கும் இது தெரியும். விரைவில் உரிமம் வழங்கவுள்ளதை அறிந்த சிலர், அரசியல் லாபத்துக்காக போராட்டம் நடத்தி திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எந்த வகையான திசை திருப்பல்களுக்கும் மீனவர்கள் ஆளாகாமல், வாழ்வாதார கோரிக்கையை வென்றெடுக்க அரசுடன் சேர்ந்து நிற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.