மூளைச்சாவு அடைந்தவரின் ஐந்து உடலுறுப்புகள் தானம்
பவானி:ஆப்பக்கூடல் அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சபாபதி, 56; ஆப்பக்கூடல் தி.மு.க., ஒருங்கிணைப்பாளர். மனைவி, ஒரு மகன் உள்ளனர். சில நாட்களுக்கு ஆப்பக்கூடலில் இருந்து பெருந்தலையூருக்கு பைக்கில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கினார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதனால் குடும்பத்தினர் சபாபதி உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.கண்கள், இதயம், சிறுநீரகம், நுரையீரல், கணையம் ஆகியன தானமாக வழங்கப்பட்டது. சொந்த ஊரான புதுப்பாளையத்துக்கு உடல் நேற்று கொண்டு வரப்பட்டது. அரசு சார்பில் பவானி வருவாய் துறையினர், ஆப்பக்கூடல் போலீசார் முன்னிலையில், அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.