உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

பவானி கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர், தென்மேற்கு பருவ மழை காரணமாக, பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை உயரம், 105 அடி வரை தண்ணீர் தேக்க முடியும். ஆனால் ஜூலை மாதம் இறுதிவரை, ௧௦௦ அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். அதன் பிறகு வரும் நீரை, அணை நிரம்பியதாக கருதி, உபரி நீராக வெளியேற்றப்படும். நேற்று மாலை அணை நீர்மட்டம், ௯௯.௧௩ அடியாக இருந்தது. அணை நீர் வரத்து, ௫,௫௪௮ கன அடியாக இருந்தது. இந்நிலையில் இரவு, ௧௦:௦௦ மணிக்கு, பில்லுார் அணையில் இருந்து, ௯,௦௦௦ கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்று காலை அணைய வந்தடையும். அதன் பிறகு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, அணை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நேற்று மாலை முதலே வெ ள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.குறிப்பாக கரையோர கிராமங்களான, பவானிசாகர், சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உள்ளாட்சித்துறை ஊழியர்கள், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை