உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

சென்னிமலை: சென்னிமலையில் உள்ள கடைகளில், சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம், சென்னிமலை போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்தார். இதில், 29 கடைகளில் ஆய்வு செய்ததில், கேரி பேக் பயன்படுத்திய எட்டு கடைகளில், 20 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் கவர் பறிமுதல் செய்தார். இரு கடைகளில் காலாவதி உணவுப்பொருள் ஐந்து கிலோ பறிமுதல் செய்தார். எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து விற்பனை செய்த இரு கடைகள் என மொத்தம், 12 கடைகளுக்கு, தலா, ௧,௦௦௦ ரூபாய் என, 12,000 ரூபாய் அபராதம் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி