உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறைதீர் முகாம் மண்டல தலைவர் முதல் மக்கள் வரை மனு தந்தனர்

மாநகராட்சியில் முதல் முறையாக மக்கள் குறைதீர் முகாம் மண்டல தலைவர் முதல் மக்கள் வரை மனு தந்தனர்

ஈரோடு, மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முறையாக, மக்கள் குறைதீர் முகாம் நேற்று தொடங்கியது. இதில் மண்டல தலைவர் முதல், மக்கள் வரை நம்பிக்கையுடன் மனு அளித்தனர். கண் துடைப்புக்காக மனுக்களை பெறும் நிகழ்வாக மாற்றாமல், மனுக்கள் மீது கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர் முகாம் நடக்கும் என்று, புதியதாக பொறுப்பேற்ற கமிஷனர் அர்பித் ஜெயின் அறிவித்தார். இதன்படி முதல் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. மாநகராட்சி வளாகத்தில் புதிய கட்டடத்தின் முதல் தளத்தில் முகாமுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேயர் நாகரத்தினம் தலைமையில், கமிஷனர் அர்பித் ஜெயின் உட்பட அதிகாரிகள், மண்டல தலைவர்கள், சில கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.முகாமில் நான்காவது மண்டல தலைவர் தண்டபாணி மனு வழங்கினார். அதில், எனது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் தெருவிளக்குகளுக்கு குறைவான வாட்ஸ் பல்பு போட்டுள்ளனர். இதனால் போதிய வெளிச்சம் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், விளக்கு இருப்பில்லை என்கின்றனர். ஆனால், அமைச்சர் வீடுள்ள பகுதிகளில் மட்டும் உடனடியாக சரி செய்கின்றனர். குறைந்தபட்சம் ஜங்சன் பகுதிகளில் மட்டுமாவது அதிக பவர் பல்புகளை போட வேண்டும். இதேபோல் பாதான சாக்கடைகளில் மண் அடைத்து கழிவுநீர் தேங்குகிறது. அதை பைபாஸ் செய்துதான் வெளியேற்றி வருகிறோம். ஆனால், துார்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.முகாமில் சலசலப்புசக்திவேல் என்பவர் அளித்த மனுவில் கூறியதாவது:மூன்றாவது மண்டலத்தில் வாட்ச்மேன் மற்றும் தண்ணீர் திறந்துவிடும் வால்வுமேனாக பணியாற்றும் நெடுஞ்செழியன், அலுவலக பதிவேட்டில் கையெழுத்து போடுவதோடு சரி. வேலைக்கு செல்வதில்லை. நாவலன் என பெயரை மாற்றிக்கொண்டு, கராத்தே பயிற்சி பள்ளி நடத்துகிறார். அவர் மீது புகாரளித்தால், அமைச்சர், எம்.பி., பெயர்களை சொல்லி மிரட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சியை ஏமாற்றி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். அமைச்சர், எம்.பி., பெயர்களை பயன்படுத்துவதாக அவர் கூறியதால், மண்டல தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து மக்களும் மனு அளித்தனர். மொத்தம், 36 மனு பெறப்பட்டது.முகாமில், 12வது வார்டு ஈ.பி.பி.நகரை சேர்ந்த செந்தில்குமார், வீட்டுக்கான வரி அனைத்தும் செலுத்தி விட்டதால், என்.ஓ.சி., சான்றிதழ் கேட்டு மனு அளித்தார். அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற, 35 மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை