செக்போஸ்டுகளை மூடியதால் வன சொத்து கொள்ளை மாவட்டத்தில் ஜோராக நடப்பதாக ஆதங்கம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வனத்துறை சோதனைச்சாவடிகள் மூட -பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான வன சொத்துகளை மர மாபியா கும்பல் திருடி செல்வது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, பெருந்துறை, பவானி-லட்-சுமி நகர், ஈரோடு கருங்கல்பாளையத்தில் வனத்துறை சோதனை சாவடி செயல்பட்டது. மரம் ஏற்றி வரும் லாரிகள் உள்-ளிட்டவற்றை இங்குள்ள வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்வர். இதனால் மர கடத்தல், வன சொத்துகளை மர மாபியா கும்பல் திருடும் சம்பவம் குறைந்தது. இந்த வனத்துறை சோத-னைச்சாவடிகள் மூடப்பட்டது, மரக்கடத்தல் மாபியா கும்பலுக்கு சாதகமாகி விட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அமைச்சருக்கே தெரியாதுஇதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் வனத்-துறை செக்போஸ்டுகளை மூடி ஓராண்டாகிறது. இந்த தகவல் அப்போதைய வனத்துறை அமைச்சருக்கே தெரியாது. உயரதிகாரி-களே முடிவெடுத்து மூடி விட்டனர். மரத்துக்கு ஜி.எஸ்.டி., இல்லை. விற்பனை வரியும் கிடையாது. மரத்துடன்... மணலும்...எனவே மரத்தை சட்ட விரோதமாக வெட்டி கடத்தி விற்கும் மர மாபியா கும்பல் அதிகரித்துள்ளது. சோதனைச்சாவடிகளும் இல்-லாததால் முறைப்படி மரங்களை வெட்டுவது கிடையாது. சட்ட விரோதமாக வெட்டி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்தி செல்கின்றனர். குறிப்பாக வனப்பகுதியில் இருந்து சந்தன மரம், தேக்கு மரங்கள் மட்டுமின்றி யானை தந்தம், புலி தோல், நரி நகம் உள்ளிட்டவை கடத்தப்படுவது சர்வ சாதாரணமாக நடக்-கிறது. மர கடத்தல் மட்டுமின்றி ரிசர்வ் பாரஸ்ட் பகுதியில் இருந்து மணல் கடத்தலும் நடக்கிறது. வனத்துறை சார்பில் குற்ற தடுப்பு, கண்காணிப்புக்கு வழியில்லை. ஏனெனில் முன்பு, 20 வன ஊழியர்கள் இருந்தனர். தற்போது மூவர் மட்டுமே உள்-ளனர். மீண்டும் சோதனைச்சாவடிகளை அமைத்தால் மட்டுமே வன சொத்துக்கள் காப்பாற்றப்படும். இவ்வாறு கூறினர்.