உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.ஐ., தேர்வு இலவச பயிற்சி நாளை துவக்கம்

எஸ்.ஐ., தேர்வு இலவச பயிற்சி நாளை துவக்கம்

ஈரோடு:சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், எஸ்.ஐ., போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் நாளை 23ந் தேதி துவங்குகிறது. பயிற்றுனர்கள் மூலம், தமிழ், ஆங்கில வழியில் நடத்தப்படும். ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பொது அறிவு மாத இதழ்கள், இணைய வழித்தேர்வு, முழு மாதிரி தேர்வு, மென்பாட குறிப்புகள் எடுத்து கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதியுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண்கள் பங்கேற்கலாம்.A


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ