கஞ்சா கடத்தியவர் கைது
ஈரோடு, ஈரோடு டவுன் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார், ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள பார்சல் அலுவலக பகுதியில் கண்காணிப்பில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அங்கு நடமாடிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹரிசிங், 29, என்பவரிடம், 1,250 கிராம் கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருப்பூரில் பொங்கம்பாளையம் பகுதியில் வசிப்பது தெரியவந்தது.