உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூண்டு விலை கிலோவுக்கு ரூ.100 சரிவு

பூண்டு விலை கிலோவுக்கு ரூ.100 சரிவு

சேலம்: மத்திய பிரதேசம், ராஜஸ் தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் புது பூண்டு அறுவடை சீசன் தொடங்கி யுள்ளது. இதனால் ‍சேலம், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட், லீபஜாருக்கு பூண்டு வரத்து அதிகரித்து, அதன் விலை சரிந்துள்ளது.இதுகுறித்து, பூண்டு மொத்த வியாபாரிகள் கூறிய தாவது:கடந்த ஆண்டு வடமாநி லங்களில் மழையால் பூண்டு அறுவடை பாதிக்கப்பட்டு, வரத்து சரிந்தது. இதனால் அதன் விலை, 10 ஆண்டு களாக இல்லாதபடி உயர்ந்தது. குறிப்பாக ஹிமாச்சல் மலை பூண்டு கி‍லோ, 450 ரூபாய், பிற பூண்டு ரகங்கள், 300 ரூபாய் வரை விற்றது. இருப்பினும் கடந்த மாதம் வரத்து சீராக இருந்த நிலையில், மலை பூண்டு, 300 முதல், 340 ரூபாய் வரை சரிந்தது.இந்நிலையில் பூண்டு அறுவடை சீசன் ஜனவரி, 2ம் வாரம் தொடங்கியது. இது மார்ச் வரை இருக்கும். ஒரு ஏக்கரில், 100 மூட்டை விளைச்சல் வந்த இடத்தில், தற்போது, 130 முதல், 150 மூட்டைகள் வரை விளைச்சல் கிடைக்கிறது. இதனால் கடந்த வாரம் மார்க்கெட்டுக்கு தினமும், 60 முதல், 70 டன் வந்த நிலை மாறி, தற்போது தினமும், 100 டன் அளவுக்கு வரத்து உள்ளது. இதன் எதிரொலியாக, கிலோ மலை பூண்டு, 250 ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல் நாட்டு பூண்டு, 240க்கு விற்றது, 60 முதல், 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. லட்டு ரகம், 220ல் இருந்து, 70 ரூபாய், பாம் ரகம், 250ல் இருந்து, 100, எக்ஸ்ட்ரா பாம் ரகம், 280ல் இருந்து, 120 ரூபாய், நடுத்தர ரகம், 200ல் இருந்து, 60 முதல், 100 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை