பஸ்சில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
கோபி: கோபி அருகே கபிலர் வீதியை சேர்ந்தவர் அலமேலு, 68; திங்களூர் அருகேயுள்ள அப்பிச்சிமார் மடம் கோவிலுக்கு சென்று விட்டு, '7சி' அரசு டவுன் பஸ்சில் பயணித்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை, அடையாளம் தெரியாத நபர் பறிந்து சென்றார். அலமேலு புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.