மேலும் செய்திகள்
மாநில நீச்சல் போட்டிக்கு தேர்வு
14-Sep-2024
ஈரோடு: ஈரோடு மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்தது. இதில் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கபடி போட்டியில் தங்கம் வென்றது. இதேபோல் பாரதியார் பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான போட்டியிலும் தங்கம் வென்றது.பளு துாக்குதலில் ஆறு தங்கம், ஒரு வெள்ளி; தடகளத்தில் இரு தங்கம், தலா ஒரு வெள்ளி, வெண்கலம்; நீச்சல் போட்டியில் மூன்று தங்கம்; சிலம்பத்தில் இரு வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றது. பத்ககம் வென்ற கல்லுாரி மாணவ, மாணவியரை, கல்லுாரி செயலர் பாலுசாமி, முதல்வர் சங்கரசுப்பிரமணியம், இயக்குனர் வெங்கடாசலம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.
14-Sep-2024