உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 நாளில் தங்கம் விலை ரூ.1,200 உயர்வு

2 நாளில் தங்கம் விலை ரூ.1,200 உயர்வு

சேலம், டிச. 12-சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். ஆனால் கடந்த இரு நாட்களாக சேலத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.‍ குறிப்பாக கடந்த, 9ல் தங்கம் கிராம், 7,100, பவுன், 56,800 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் கிராம், 7,175 ரூபாயாகவும், நேற்று, 7,250 ரூபாயாகவும் உயர்ந்தது. இதன்படி பவுன், 58,000 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது. இதன்மூலம் இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு, 150 ரூபாய், பவுனுக்கு, 1,200 ரூபாய் உயர்ந்துள்ளது.இதுகுறித்து சேலம் மாநகர தங்கம் வெள்ளி வைர வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆனந்தகுமார் கூறுகையில், ''டாலரின் மதிப்பு உயர்வு, இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை