கோபி பி.கே.ஆர்., மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா-
ஈரோடு:கோபி பி.கே.ஆர்., மகளிர் கலைக்கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் மற்றும் செயலர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் தனலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தி, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம் கலந்து கொண்டார்.கல்லுாரியின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டம், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கல்லுாரி அளவில் சிறந்த மதிப்பெண் விழுக்காடு பெற்ற மாணவிகளுக்கு, வேலுார் வி.ஐ.டி., பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதனால் வழங்கப்பட்ட தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. மொத்தம், 490 மாணவிகள் பட்டம் பெற்றனர். விழாவில் அனைத்து துறை முதன்மையர், துறை தலைவர்கள், பேராசிரியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.