உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி நகராட்சி வரியினங்களில்ரூ.14.37 கோடிக்கு வரிவசூல்

கோபி நகராட்சி வரியினங்களில்ரூ.14.37 கோடிக்கு வரிவசூல்

கோபி:கோபி நகராட்சியில், தொழில்வரி, குடிநீர் வரி, வீட்டு வரி என, 14.37 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.கோபி நகராட்சியில், 30 வார்டுகளில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோபி நகராட்சி சார்பில், ஆண்டுதோறும் வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் வரி, கடை வாடகை என வசூலிக்கின்றனர்.அதன்படி, கடந்த நிதியாண்டில் வீட்டுவரியாக, 10.26 கோடி இலக்கு நிர்ணயித்ததில், 8.79 கோடி ரூபாய் என, 95 சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வரியாக, 1.79 கோடி இலக்கு நிர்ணயித்ததில், 1.61 கோடி ரூபாய் என, 92 சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. தொழில்வரியாக, 63 லட்சம் இலக்கு நிர்ணயித்ததில், அனைத்து தொகையும் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.அதேபோல், கடை வாடகையாக, 2.07 கோடி இலக்கு நிர்ணயித்ததில், அதே தொகை முழுவதுமாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வரியினங்களில் மொத்தமாக, 17.71 கோடி இலக்கு நிர்ணயித்ததில், 14.37 கோடி ரூபாய் என, 93 சதவீதம் வரிவசூல் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை