உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காரில் குட்கா கடத்திய அரசு பஸ் டிரைவர் கைது

காரில் குட்கா கடத்திய அரசு பஸ் டிரைவர் கைது

காரில் 'குட்கா' கடத்தியஅரசு பஸ் டிரைவர் கைதுஅந்தியூர், டிச. 22-பர்கூர் போலீஸ் செக்போஸ்ட்டில், போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு காரில், அத்தாணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 42, வந்தார். காரில் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்ட பொருட்கள், ௯௦ பண்டல் இருந்தது. காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அவரையும் கைது செய்தனர். விசாரணையில் அந்தியூர் அரசு பணிமனையில், ஸ்பேர் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ