டூவீலரில் சென்றபோது அரசு பஸ் டிரைவர் பலி
கோபி:கோபி அருகே எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 59; அரசு பஸ் டிரைவர். கடந்த மாதம், 29ம் தேதி இரவு, 8:30 மணிக்கு சாணார்பதி என்ற இடத்தில், ஹீரோ ேஹாண்டா பேசன் பிளஸ் பைக்கில் சென்றார்.சாலையோரமாக சென்ற எருமை மீது மோதாமல் இருக்க, பிரேக் பிடித்தபோது நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்தார். கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சக்திவேல் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரின் மகன் லட்சுமி காந்தன், 26, புகாரின்படி, கோபி போலீசார்விசாரிக்கின்றனர்.