அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
காங்கேயம்: காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருப்பூர்-காங்கேயம் இடையில், டவுன் பஸ் நெ.16 இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் திருப்பூர் மெடிக்கல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சில பெண்கள் வாய்க்கால் மேடு செல்ல ஏறியுள்ளனர். அப்போது டிரைவரான தாராபுரத்தை சேர்ந்த லோகநாதன், 50; காங்கேயம் பஸ் ஸ்டாண்டில்தான் இறக்கி விடுவேன். அப்போது பயணச்சீட்டு பெறாமல் வந்ததாக, உங்களை அபராதம் கட்ட வைக்கிறேன் எனக்கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பரவிய நிலையில், கோவை மண்டல நிர்வாக இயக்குனர் கணபதி, காங்கேயம் பணிமனை கிளை மேலாளர் வினோத் ஆகியோர், டிரைவர் லோகநாதனின் மோசமான நடவடிக்கையை கண்டித்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர்.