உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / படியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

படியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

காங்கேயம், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து, காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். இதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் படியூரில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே, காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிவானந்தன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஐந்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், ஐந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை, அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ