உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சங்கம் சார்பில், ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், வரவுக்கும் - செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு போக்குவரத்து கழகத்துக்கு அரசு வழங்க வேண்டும். தனியார் மூலம் மின்சார பஸ்களை இயக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு ஒப்பந்-தப்படியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒப்-பந்த பணியாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் முருகையா, சம்மே-ளன உதவி செயலர் வேளாங்கண்ணிராஜ், மண்-டல பொது செயலர் ஜான்சன் கென்னடி, ஜெக-நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை