உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசின் இலவச சேலை தயாரிப்பு நாளை முதல் தொடங்க வாய்ப்பு

அரசின் இலவச சேலை தயாரிப்பு நாளை முதல் தொடங்க வாய்ப்பு

ஈரோடு, அரசின் இலவச சேலைக்கான நுால் வரத்தாக தொடங்கியுள்ளதால், நாளை முதல் தயாரிப்பு பணி துவங்கும் என நெசவாளர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலை தயாரிக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு, 1 கோடியே, 34 லட்சத்து, 43,647 சேலை; 1 கோடியே, 41 லட்சத்து, 61,410 வேட்டி தயாரிக்க நுால் டெண்டர் இறுதி செய்து, 20 நாட்களுக்கு முன் நுால் வழங்கி பணி நடந்து வருகிறது. தற்போது சேலைக்கான நுால் வந்துள்ளது.இதுபற்றி நெசவாளர்கள் கூறியதாவது: இந்தாண்டு, 1.34 கோடி சேலை தயாரிக்க, 1,940 டன் நுால் வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக ஈரோடு சரக நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத்துக்கு, 150 டன் நுால் வர தொடங்கியுள்ளது. நெசவு செய்வோருக்கு சென்று, நாளை முதல் தறிகள் இயக்கத்துக்கு வர வாய்ப்புள்ளது. திருச்செங்கோடு உட்பட பிற சரகங்களுக்கும் குறைந்தளவு நுால் வரத்தாகி உள்ளதால் அடுத்தடுத்த வாரங்களில் முழு அளவில் நுால் வரத்தாகும் என நம்புகிறோம். அவ்வாறு வரத்தானால் டிச., இறுதிக்குள் பணியை நிறைவு செய்யலாம். அதேநேரம் தமிழக அளவில், 12,000 விசைத்தறிகளில் வேட்டி உற்பத்தி செய்யப்படும். 20 நாட்களுக்கு முன்பே நுால் வழங்கி உற்பத்தி துவங்கி, தற்போது தரச்சோதனை செய்யும் பணிக்கு வேட்டிகள் வந்துள்ளன. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை