உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாத்தாவுடன் சித்தர் பீடத்துக்கு வந்தபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி பேரன் பலி

தாத்தாவுடன் சித்தர் பீடத்துக்கு வந்தபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி பேரன் பலி

புன்செய்புளியம்பட்டி, தாத்தாவுடன் சித்தர் பீடத்துக்கு வந்த பேரன், தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் காரமடை, தாயனுாரை சேர்ந்தவர் கார்த்திக், 30; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பூர்ணிமா. தம்பதியின் மகன் ஆதிரா, ௩; பூர்ணிமாவின் தந்தை சந்திரசேகரன். ஆதிராவை அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள மாதம்பாளையம் கலியுக சித்தர் பீடத்துக்கு நேற்று வந்தார். பேரனை மடியில் வைத்தபடி தியானத்தில் ஈடுபட்டிருந்தார். தியானம் முடிந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்து சித்தர் பீடம் முழுவதும் தேடினார்.சுவாமி சிலைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த, 4 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் குழந்தை மூழ்கி கிடந்தது. அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன் மற்றும் அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு, அன்னுார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை