உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய் மாமனை குத்திய மாப்பிள்ளை கைது

தாய் மாமனை குத்திய மாப்பிள்ளை கைது

வெள்ளகோவில் வெள்ளகோவிலை அடுத்த முத்துார், மாதவராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 45; மரத்தச்சு வேலை செய்து வருகிறார். சகோதரி உறவுமுறை கொண்ட முத்துார், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர்கள் விக்னேஷ், 26, அபிஷேக், 23; மூவரும் முத்துாரில் ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மாலை மது குடித்தனர். போதை ஏறியவுடன் மூவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விக்னேஷ், பீர் பாட்டிலால் மணிகண்டன் தலையில் அடித்துள்ளார். இதில் மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், புகாரின்படி வெள்ளகோவில் போலீசார், விக்னேஷை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை