உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கருங்கல்பாளையத்தில் குண்டம் விழா

கருங்கல்பாளையத்தில் குண்டம் விழா

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவிலின் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த மாதம், 26ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழா முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நேற்று காலை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, 11:௦௦ மணிக்கு தேரோட்டம் நடந்தது. இன்று இரவு, 7:௦௦ மணிக்கு பக்தர்கள் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு பொங்கல் வைபவம் நடக்கிறது. அதை தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலமும் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ