உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 22 வழக்குகளில் சிக்கியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

22 வழக்குகளில் சிக்கியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

ஈரோடு: ஈரோடு, சோலார் பாலுசாமி நகரை சேர்ந்த காளிமுத்து மகன் மகேஸ்வரன், 28. தற்போது 19 ரோடு ஏ.கே.எம். நகர் ரூடிஸ் காலனியில் வசிக்கிறார். கஞ்சா விற்றது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் இவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவர் மீது, 22 குற்ற வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என எஸ்.பி.,சுஜாதா, ஈரோடு கலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் பரிசீலனை செய்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் மகேஸ்வரன் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை